பொதுத் தேர்தல் ஒன்றுடன் பொது கருத்து கணிப்பும் நடத்தப்பட வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல
பொதுத் தேர்தல் ஒன்றுடன் பொது கருத்து கணிப்பும் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்லவின் கருத்து
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மண் கிரியெல்ல, இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசாங்கம் ஒன்று அமைவதுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
எனவே பொதுத் தேர்தல் ஒன்றுடன் பொது கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தினால் குறித்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்ற முடியும்.

நிறைவேற்று அதிகாரத்தை பலமானதாகும் செயற்பாடு
ஜனாதிபதி 19வது திருத்த சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப் போவதாக கூறிய போதிலும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை இன்னும் பலமானதாக மாற்றிக்கொள்ளும் செயற்பாடே நடைபெறுகின்றது.
கடந்த மே மாதம் 11ம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் ஜனாதிபதி அதனை வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், தற்போது வேறு விடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன” என்றும் லக்ஷ்மண் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam