சமகால அரசியல் நிலை தொடர்பில் எம்.ஸ்ரீதருக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையில் கலந்துரையாடல் (Videos)
பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதிமைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சமகால அரசியல் நிலை
கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (09.10.2022 ) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சமகால அரசியல் நிலை மற்றும், எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடு
ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழர் அரசியல் நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

