புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் றீச்ஷாவின் சுவைமிகு சுவையூற்று விருந்தகம்(Video)
புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் நேற்றைய தினம்(22.06.2023) ஆரம்பமானது.
புங்கையூரில் வீற்றிருந்து உலகலெல்லாம் பரந்துவாழும் எம்மை வளமுடன் வாழவைக்கும் நாயகி ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மகாயாக மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 25.06.2023 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை நிறுவனத்தின் ஏற்பாட்டில் ''சுவைமிகு சுவையூற்று'' விருந்தகம் ஒன்று புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த விருந்தகத்தில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான வசதியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய தேவஸ்தான மகா கும்பாபிஷேகதின் எண்ணைக் காப்பு நிகழ்வானது நேற்றைய தினமும்(22), இன்றைய தினமும்(23.06.2023) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
