நீங்களும் அருள் பெறலாம்! தமிழர் கலாசாரத்தின் மற்றுமொரு அடையாளம்(Video)
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை தமிழரின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடம் பதிப்பதற்கு தவறவில்லை.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுற்றுலாதலமான றீ(ச்)ஷா பண்ணையில் பணிபுரிபவர்கள் வழிபட்டு வந்த சிறிய அளவிலான காளி தேவி கோவில் தற்போது பிரம்மாண்டமாக புணரமைக்கப்பட்டுள்ளது.
கோடி புண்ணியம் தேடி தரும் வகையில் காளி தேவி கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா பண்ணைக்கு வருகை தருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இனிமேல் றீ(ச்)ஷா பண்ணைக்கு செல்பவர்கள் காளி தேவியை வழிபட்டு அருள் பெறுவதற்கான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா பண்ணை காளி தேவி ஆலயம் தொடர்பான விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக பார்வையிடலாம்,



