பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழர் பகுதியில் ஓர் புதிய முயற்சி(Video)
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும். இப் பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இதில் மக்களின் தேவை கருதி பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில், வடமாகாணத்திற்கு பெருமளவு பணம் கிடைத்தாலும் அது உடனடியாக வெளியே செல்கின்றது. அதாவது தாயகத்தில் அபிவிருத்திகளை செய்யவோ பொருளாதாரத்தில் மாற்றங்களை செய்யவோ அது பயன்படவில்லை.இதைபற்றி நாம் சிந்திப்பதில்லை.
எனவே நமது உற்பத்திகள் வெளியில் சென்று பணம் நமக்கு கிடைக்கும் போது தான் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்.
அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக றீ(ச்)ஷாவில் கோழி பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓரிரு வருடங்களில் வடமாகாணத்திற்கு தேவையான கோழி இறைச்சி றீ(ச்)ஷாவிலிருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகின்றது இந்த காணொளி,