கொத்து ரொட்டியின் விலை குறைப்பு
கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நாளை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலையில் வீழ்ச்சி
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மா அடிப்படையிலான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது கொத்து ரொட்டி ஒன்றின் விலையானது ரூபா 500 முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
