மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய்யின் விலையை மாத்திரம் குறைத்துள்ளது.
விலை குறைப்பு
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
எரிபொருட்களின் விலை
இந்நிலையில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா ஐஓசி(IOC) மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தங்களது எரிபொருட்களின் விலையை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளன.
அதற்கமைய, ஒக்டென் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 309 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டோ டீசல் லீட்டரொன்றின் விலையை 286 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டரொன்றின் விலையை 313 ரூபாவாகவும் தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.