வவுனியா மாநகரசபையால் அறவிடப்படும் வரியை 5 வீதமாக குறைக்க வலியுறுத்தல்
வவுனியா மாநகரசபை உறுப்பினர் சிவசங்கர் மாநகரசபையினால் மக்களிடம் அறவிடப்படும் வரியை 5 வீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த நிதியை மட்டும் வைத்து மாநகர சபையை இயக்க வேண்டியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்
மேலும் தெரிவிக்கையில், கடந்த 14 ஆம் திகதி வவுனியா மாநகர சபையில் வரி சம்மந்தமான விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகபடியான வரி மாநகர வாழ் மக்களுக்கு மிகவும் சிக்கல் நிலையை கொடுத்துள்ளது.
அவர்களின் வாழ்க்கைiயை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. எனவே மாநகர சபையின் வரி வீதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் செலுத்தக் கூடிய வகையில் வரியை மாற்றியமைக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும்.
அந்த அடிப்படையில் பல வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் மக்களது வரி குறைப்புக்கான எங்களது கோரிக்கை ஒரு வாக்கினால் வெல்ல முடியாமல் போய் விட்டது.
ஆகவே, வவுனியா மாநகர சபையைப் பொறுத்த வரை வரி வீதத்தை மட்டும் வைத்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு சார்பான நிதி, அமைச்சுக்களில் இருந்து வரும் நிதி, மாகாண சபை மட்டத்தில் வரும் நிதி என பல்வேறு நிதி மூலங்கள் மாநகரசபைக்கு கிடைக்கும்.
மக்கள் பெரும் சுமையை சுமக்க
தனியாக மக்களிடம் இருந்து வரும் வரியை மட்டும் கொண்டு மாநகர சபையை நடத்துவது என்பது மாநகரத்தில் வாழும் மக்களை அதிக சுமைக்கு இட்டுச் செல்லும் ஒரு செயன் முறையாகாத செயற்பாடாக நாங்கள் அதைப் பார்க்கின்றோம்.
ஆகவே, இந்த வரியை செலுத்துவதில் மிகப் பெரிய சவாலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
வரி விகிதம் அதிகரிப்பு மற்றும் சொத்தின் மதிப்பு அதிகரிப்பு இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுமிடத்து மக்கள் பெரும் சுமையை சுமக்க வேண்டியுள்ளது.
இதுவரை மிகக் குறைந்தளவிலான மக்களே வரியை செலுத்தியுள்ளார்கள். மக்களை வரிக் கொள்கைக்கு பழக்கப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
அந்த வரியை மக்கள் செலுத்தக் கூடிய நிலையை உருவாக்க வேண்டியுள்ளதுடன், அபிவிருத்தியில் அவர்களது நிதியின் பங்களிப்பு தொடர்பிலும் மக்களை உணரச் செய்ய வேண்டும். அது தான் தான் சிறப்பானதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



