உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை குறைக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட உள்ளூராட்சி தேர்தல் மாற்றங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் தயாராகிறது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,700ல் இருந்து 4,400 ஆகக் குறைப்பதற்கான யோசனை தொடர்பில் விவாதிப்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
உறுப்பினர்களின் எண்ணிக்கை
சட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், சபை உறுப்பினர்களைக் குறைத்தல் மற்றும் ஏனைய மாற்றங்களைச் செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாக இருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் அந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அமைச்சரவையில் திருத்தங்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதற்காக, இரண்டு வாரங்களுக்குள் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு
இதற்கிடையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது அறிக்கையை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் குணவர்தனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்புக்கு தாங்கள்
எதிர்க்கவில்லை, ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவதற்காக,
குறித்த தெரிவுக்குழு செயற்படுமானால் அதனை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
