குறைக்கப்படும் மின் கட்டணம்! அமைச்சர் அறிவிப்பு
மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார்.
மின்சார கட்டணம்
இந்நிலையில் மின்சார கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இந்த கட்டண குறைப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை
முன்னதாக ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) தெரிவித்திருந்தார்.

இதன்படி முதல் 30 அலகுகளின் விலைகளை 2 ரூபாவினாலும், 30 முதல் 60 அலகுகளின் விலை 11 ரூபாவினாலும், 60 முதல் 90 அலகுகளின் விலை 12 ரூபாவினாலும், 90 முதல் 180 அலகுகளின் வில 20 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த கட்டண குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam