வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம்: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாகவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதனால் மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எனவே, வௌ்ளத்தினால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்து கொள்ளும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
