தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம்
இரத்தினபுரி மாவட்டத்திற்கு மேலதிகமாக களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (27ஆம் திகதி) மாலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்: இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, எலப்பாத, அயகம, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, இரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
எச்சரிக்கைகள்
களுத்துறை மாவட்டம்: புலத்சிங்ஹல, தொடங்கொட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஏனைய மாவட்டங்கள்: இதனை தவிர, கொழும்பு, காலி, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கு 1 மற்றும் 2 ஆம் கட்ட (மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த செஞ்மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அறிவுறுத்தல்
இந்தநிலையில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், வழக்கத்திற்கு மாறாக நீர் கசிதல், மரங்கள் சாய்வது போன்ற தோற்றம் மற்றும் நீர் பாதைகளில் திடீர் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழை நீடிக்கும் பட்சத்தில் அல்லது நிலைமை மோசமடைந்தால், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள அர்னாப்! இலங்கை மீதான பாதிப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri