இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்ட சிவப்பு தரவு புத்தகம்!
இலங்கையில் அழிந்து வரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த சிவப்பு தரவு புத்தகத்தின் புதிய பதிப்பை தயாரிப்பதை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிறைவுசெய்துள்ளது.
இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தொகுக்கப்படுகிறது. இலங்கையில் கடைசியாக ஒரு சிவப்பு தரவு புத்தகம் 2012 இல் வெளியிடப்பட்டது.
ஒரு வருடத்திற்கு முன்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு சிவப்பு தரவு புத்தகத்தை விரைவில் தொகுக்குமாறு அறிவுறுத்தினார்.
அவரது வழிகாட்டுதலின் படி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பல்லுயிர் பிரிவு, சிவப்பு தரவு புத்தகத்தை நிறைவு செய்துள்ளது. சிவப்பு தரவு புத்தக வகைப்பாடு ஒன்பது பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், புதிய பதிப்பு வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை அமைச்சரின் தலைமையில் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பங்கேற்பில் நடைபெற உள்ளது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan