தீபச்செல்வனின் "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" நூலிற்கு கொழும்பில் செங்கம்பள வரவேற்பு (Photos)
ஈழத்தின் கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமையினை தன்னகத்தே கொண்ட தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற நூலானது 16 ஆண்டுகளின் பின் அனுஷா சிவலிங்கத்தின் மொழியாக்கத்தில் சிங்களத்தில் நூலாக வெளிவந்துள்ளது.
நூல் வெளியீட்டு நிகழ்வானது கடந்த 29ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சிங்கள மொழி படைப்பாளிகள் வருகை
நூல் வெளியீட்டு விழாவிற்கு பெருமளவான சிங்கள மொழி படைப்பாளிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் குரலாக தன் முதற் கவிதைத் தொகுப்பு வழி சிங்கள சமூகத்துடன் பேசத் துவங்கும் கவிஞர் தீபச்செல்வனின் முயற்சிப் பயணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கூடவே தொடர்ச்சியாக தனது ஆளுமை மூலமாக மொழிபெயர்ப்புக்களில் ஈடுபட்டுவரும் அனுஷா சிவலிங்கமும் கவனம் பெற்றுள்ளார்.














உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
