காலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை காலை 10 மணியுடன் நிறைவடைய 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் 10 மாவட்டங்களில் அடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும். சப்ரகமுவ, மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
