மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சீரற்ற வானிலை தொடர்பில் மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கேகாலை, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டத்திற்கும் பல பிராந்திய பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 11 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, பதுளை, காலி, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தின் மலைப்பகுதிகள் மற்றும் சரிவான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறும் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
