நாட்டில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு
நாட்டில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒருபக்கம் நிலநடுக்கம் பேரிடர்... மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம் News Lankasri

Super Singer: ஈழத்து குயில் பிரியங்ஹாவின் தெரிக்கவிடும் குரல்... நடனத்தில் கலக்கிய குட்டீஸ் Manithan
