மீண்டும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்: சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
கோவிட் மரணங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக நேற்றைய தினம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த கோவிட் மரணங்களுக்கு காரணம், மீண்டும் கோவிட் வேகமாக பரவுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று கிடைத்த விபரங்களின் அடிப்படையில் கோவிட் மரணங்கள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது. இது குறித்து எதனையும் 100 வீதம் உறுதியாக கூற முடியாது.
மரணங்கள் அதிகரித்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மரணங்கள் அதிகரித்திருப்பது ஒரு சமிக்ஞையாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இதனால், இந்த நிலைமையை சாதாரணமாக கருதாது, மிகவும் கவனமாக செயற்படுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri