வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!
வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்றைய தினம் (10.03.2023) வவுனியா - பூவரசங்குளம், மணியர்குளம் பகுதியிலே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணை
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாகப் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 10 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan