தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்பு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபரின் சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து நேற்று இரவு முதல் கணவனை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam