மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா - ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காகத் தனது வீட்டில் இருந்து சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (04.12) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காகக் காலையில் இருவர் சென்றிருந்தனர்.
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாகக் கூறி குளத்திலிருந்து வெளியே சென்றுள்ளார்.
மற்றைய நபர் மீன் பிடித்து முடிந்ததும் குளத்திலிருந்து வெளியே வந்து வீடு நோக்கிச் சென்ற போது கூட வந்தவர் குளத்து ஒழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியா - கல்நாட்டியகுளம், மதுரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா இன்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்து
ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam