விவசாய காணிக்குள் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (Photos)
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, நெல்லிக்காடு கிராமத்தில் விவசாய காணிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று கூழாவடி நெல்லிக் காடு கிராமத்தைச் சேர்ந்த அழகிப்போடி- தங்கராசா வயது 65, என்னும் நான்கு பிள்ளைகளுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியில் போன குடும்பஸ்தர் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்களால் இரவு தேடுதல் மேற்கொண்டனர்.
இதன்போது இன்று காலை அதிகாலை வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவருடைய விவசாய காணியில் விவசாயத்துக்குப் பாவிக்கும் கிருமி நாசினி போத்தல் அருகாமையில் கிடந்தவாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உறவினர்களால் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை
வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் விசாரணை முடிவுற்றதும் சடலத்தினை போரதீவுப்பற்று பிரதேசசபை வாகன உதவியுடன் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
