கடலில் இழுத்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த மூவர் கடலில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவரை தேடும் பணி தொடர்வதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலை இழத்து சென்ற நிலையில் மூவர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களை கடலில் தேடியும் காணாமையால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது.
அவர்களுடன் கூடச் சென்ற பெண் முல்லைத்தீவு பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மற்றும் காணாமல் போன இருவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri