காத்தான்குடியில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்பு
காத்தான்குடியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கமை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசேட திடீர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
இந்த திடீர் சோதனை நடவடடிக்கை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஊறணி காத்தான்குடி, போன்ற பிரதேசங்களில் சீமெந்து பல்மா சீனி அரிசி போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பாக கண்டறியும் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர் .
இதன்போது காத்தான்குடி பெரிய சந்தைக் கட்டிடத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றில் சோதனையின் போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு அவைகள் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களிடத்திலிருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு பால்மா பக்கட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam