விசேட அதிரடி படையினரால் மோட்டார் செல்கள் மீட்பு
வவுனியா - குஞ்சுக்குளம் மற்றும், வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதி மற்றும் வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் 7 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்ற அனுமதியின் பின்னர் வெடிபொருட்களை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.











ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
