வவுனியாவில் தனிமையில் நின்ற இளைஞரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
வவுனியாவில் இளைஞரொருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - செட்டிகுளம் - ஆண்டியாபுளியங்குளம் விசேட அதிரடி படையினருக்கு இது தொடர்பில் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வவுனியா - செட்டிகுளம் பகுதியில் தனிமையில் நின்ற இளைஞரிடம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 800 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 26 வயது இளைஞரொருவரே கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
