75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு
மன்னார் - பேசாலை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்படவிருந்த 75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நேற்று (06.09.2024) பேசாலை கடலோரப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தி எட்டு (188) கிலோகிராமுக்கு அதிக நிறையுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்க்கப்பட்ட கேரள கஞ்சா கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை நடவடிக்கை
கடற்படை நடவடிக்கைகளால் தரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்தே குறித்த போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் கைப்பற்றி பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
