வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு: காணி உரிமையாளர் கைது
வவுனியா-புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணை காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
யானையின் சடலம் இன்று(09.02.2024) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
விசாரணை
அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த யானை 24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
