இலங்கைக்கு கடத்த முயன்ற பெருமளவான போதைப்பொருள் மீட்பு
இந்திய கடலோர காவல்படையினர், 'அல்-ராசா' என்ற பாகிஸ்தான் படகில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகம் ஓன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த படகில் இருந்து பலுசிஸ்தானைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக குஜராத்தின் போர்பந்தருக்கு அழைத்து செல்லவுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த 86 கிலோ எடையுள்ள சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட போதைப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் தெரிவித்ததாக அகமதாபாத் பொலிஸ் அதிகாரி குஜராத் விகாஸ் சஹய் கூறியுள்ளார்.
எனினும் எங்கே யாரால் இந்த பொருட்கள் கையேற்கப்படவிருந்தன என்ற தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
