வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு (Photos)
வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் இன்று(14.11.2023) நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக பொதுமக்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam