முள்ளியவளை பகுதியில் அபாயகரமான ஆர்.பி.ஜி எறிகணைகள் மீட்பு
முல்லைத்தீவு - முள்ளியவளை 1 ஆம் வட்டார பகுதியில் கிணற்றில் இருந்து அபாயகரமான வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 1 ஆம் வட்டார பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் கிணறு ஒன்றை இறைத்து ஆழப்படுத்திய போதே கிணற்றுக்குள் மண்ணில் புதைந்த நிலையில் மூன்று ஆர்.பி.ஜி எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியதை தொடர்ந்து குறித்த வெடிபொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்ய முள்ளியவளை பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
