மன்னாரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கம் மீட்பு : செய்திகளின் தொகுப்பு
மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றிலிருந்து சுமார் 8 கிலோ தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.11.2023) இடம்பெற்றுள்ளது.
மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்கக் கட்டிகளை கடத்துவதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமாக அதி வேகமாக வந்த படகை நிறுத்த முற்பட்ட போது படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர்.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அவர்கள் படகை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
