தனிமையிலிருந்த பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
பாணந்துறை, வேகட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் அவ்வீட்டினுள் இருந்தது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பெண், தனது வீட்டினுள் கதிரையொன்றில் விழுந்துகிடப்பதைக் கண்ட அயலவர் ஒருவர் காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து சடலத்தை கைப்பற்றி பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர் 85 வயதான பெண் ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்படி வயோதிபப் பெண் கடந்த மூன்று நாட்களாக குறித்த வீட்டினுள் தனிமையில் இருந்துள்ள நிலையில்,கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சரீரம் பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளுக்கமைய, சரீரத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
