தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து இளம்பெண் உடல் கருகிய நிலையில் மீட்பு - சகோதரி தப்பியோட்டம்
தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து இளம்பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து தாய்-தந்தை இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், நேற்றிரவு சகோதரிகளான இருவர் மாத்திரம் இருந்த நிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில்,வீட்டில் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போது, அங்குள்ள ஒரு அறையில் விஷ்மயா எனும் பெண் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்ட மீட்புக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உடல் மிகவும் கருகிய நிலையில் இருந்ததால் உயிரிழந்தது விஷ்மயா என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, விஷ்மயாவின் இளைய சகோதரி தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
இதன் மூலம், தனது சகோதரியான விஷ்மயாவை கொலை செய்து வீட்டிற்கு தீவைத்துவிட்டு தப்பியோடியுள்ளாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri