பூநகரியில் விசேட சோதனை நடவடிக்கை: கேரள கஞ்சா மீட்பு
பூநகரி - கௌதாரி முனை பகுதியிலிருந்து கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாரும், விசேட அதிரடிபடையினரும் விசாரணை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாரும், விசேட அதிரடிபடையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல் - யது
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri