மட்டக்களப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கருவெப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய உ.விஜயரத்ன என்பவரே நேற்று(30.10.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை 11.00 மணியளவில் நாவலடியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு வருகை தந்திருந்த இவர் மாலை வேளையில் காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி த.தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனைகளின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
