யாழில் தவறான முடிவினால் ஒருவர் உயிரிழப்பு
யாழ். வடமராட்சி - வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று (16.10.2023) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 63 வயதுடைய இராமநாதன் தங்கநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டில் இரவு படுக்கையில் இருந்து அவரைக் காலையில் காணாத நிலையில் தேடிய போது
வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும், சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரதே பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.