பௌத்த பாலி பல்கலைக்கழகத்திலிருந்து வெற்று மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
ஹோமாகமவில் அமைந்துள்ள பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது அங்கிருந்து ஆயிரம் வெற்று மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனவே இந்த பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நெலுவே சுமன்வன்ச தேரர் உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகளினால் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனை நடவடுக்கைகள்
கழிவகற்றுவதற்காக காணப்பட்ட குழியொன்றில் இவ்வாறு மதுபான மற்றும் பியர் போத்தல்கள் போடப்பட்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம், குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இந்த பல்கலைக்கழகத்தில் மறைந்திருந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாரிய தொகையான வெற்று மதுபான போத்தல்கள் எவ்வாறு பல்கலைக்கழகத்திற்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
