இருவேறு பகுதிகளில் சடலங்கள் மீட்பு (Video)
கிளிநொச்சி - செல்வாநகர், புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளமொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செல்வாநகர் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பருத்தித்துறை
அல்வாய் வடமத்தி, அல்வாய் மாவிலங்கடி வீதியிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று (07.06.2023) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வேதார்வளவு, வியாபாரி மூலையைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் எனவும் தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |




சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
