முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு
புல்வெட்டுவதற்குச் சென்ற நிலையில் காணாமல் போன 60 வயதுடைய ஆண் ஒருவர் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஓலுவில் களியோடை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிந்தவூர் அட்டடைப்பள்ளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகையா ஞானசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த இரண்டாம் திகதி வீட்டிலிருந்து மாடுகளுக்குப் புல்வெட்டுவதற்காக ஓலுவில் களியோடை ஆற்றின் கரைப்பகுதிக்கு சென்ற போது வீடுதிரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் இன்று காலை ஒலுவில் களியோடை ஆற்றில் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
