நீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு
வவுனியா - பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் வவுனியா, பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர்.
இதன்போது நபர் ஒருவர் நீர்த்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்கமுடியவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri