முல்லைத்தீவு நாயாற்று பகுதியை முடக்குமாறு பரிந்துரை
முல்லைத்தீவு - நாயாற்று பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் வாடி அமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த புத்தளம்,கறுக்குப்பனை,வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்த 5 கடற்றொழிலாளர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 வரையிலானோர் வாடிகள் அமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவர்களிடம் இன்று (2) பி.சி.ஆர் பரிசோதனைக்காக சுகாதார பிரிவினர் சென்ற போது அவர்கள், ஒத்துழைக்காத நிலை காணப்பட்டுள்ளதுடன், பலர் முரண்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாயாற்று வாடிப்பகுதி மறு அறிவித்தல் வரை முடக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் எம்.உமாசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,நாயாற்று பகுதியில் பருவகால கடற்றொழிலுக்காக வந்த மீனவர்கள் சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தலையும் ,சவாலினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் முல்லைத்தீவில் கோவிட் கொத்தணி உருவாகும் அபாய நிலையினையும் தோற்றிவித்துள்ளதாகவும், இதனை உடனடியாக அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ஒரு கோவிட் கொத்தணி ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் இன்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
