ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுகட்டமைப்பது குறித்த பரிந்துரை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களை எவ்வாறு மறுகட்டமைப்பது என்பது குறித்த பரிந்துரையை வழங்குமாறு நிறுவன மறுசீரமைப்புப் பிரிவை இலங்கையின் அமைச்சரவை கேட்டுள்ளது.
இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கையின் கேட்டரிங் மற்றும் அதன் தரைக் கையாளுதல் அலகுகள் மிகவும் இலாபகரமான அலகுகள் என்ற அடிப்படையில், அவை முதலீட்டாளர்களுக்கு தனித்தனியாக விற்கப்பட வேண்டும் என்று முன்னர் பரிந்துரைத்திருந்தார்.
அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு
இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்கும் பொறுப்பை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவுக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.
போக்குவரத்து அதிகாரசபைக்கு செலுத்த வேண்டிய டொலர்
நிறுவனத்தின் நிர்வாகத்தை வெளிப்படையான கொள்முதல் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்குவதன் மூலம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் விமான சேவைகள், 175 மில்லியன் அமெரிக்க டொலர்களின் இறையாண்மை உத்தரவாதப் பத்திரத்தைக் கொண்டிருந்தன.
மேலும் 325 மில்லியன் டொலர்களை, அது, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், விமான
நிலையம் மற்றும் விமான சேவைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து
அதிகாரசபைக்கு செலுத்த வேண்டியுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
