பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மூலோபாயம் பரிந்துரை
முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டறிதல்களை ஆராய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, மோதலுக்குப் பின்னரான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மூலோபாயத்தை பரிந்துரைத்துள்ளது.
இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் செயற்பட்டார். அவர், தமது இறுதி அறிக்கையின் பரிந்துரைகளின் சுருக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றை தினம் (06.02.2023) சமர்ப்பித்துள்ளார்.
இதில், இலங்கையின் சூழலில் மோதலுக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்களை மையப்படுத்திய மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மூலோபாயம் ஒன்று அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது.
உண்மையை கண்டறியும் அலுவலகம்
அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் அலுவலகம் ஆகியவற்றின் நிறுவனத் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம்
என்பன சகிப்புத்தன்மையின் கொள்கையின் மூலம் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை
அடைய வேண்டும் என்றும் நீதியரசர் நவாஸ் பரிந்துரைத்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
