பரிந்துரைகளை பின்பற்றியிருந்தால், கடுகண்ணாவ பேரழிவை தவிா்த்திருக்கலாம்: NBRO
1999 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட NBRO என்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளை உரிய அதிகாரிகள் பின்பற்றியிருந்தால் கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலைமையை தவிர்த்திருக்கலாம் என நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவா் தொிவித்துள்ளார்
தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியல் பொறியியல் பணிப்பாளா் கே என் பண்டார இதனை தொிவித்துள்ளாா்.
பாிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்த தவறியமையே தற்போதைய அனர்த்தத்திற்கு காரணம் என்று பண்டார குறிப்பிட்டுள்ளாா்
கடுகன்னாவ மலைத்தொடரில் மழைநீர் வெளியேறுவதை சீரமைத்து அரிப்பைத் தடுக்க வேண்டும் என 1999ஆம் ஆண்டு தமது நிறுவனம் பரிந்துரைத்ததாக பண்டார தெரிவித்தார்.
இருப்பினும், பரிந்துரைகள் உரிய கவனத்தைப் பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அதுவே தற்போதைய பேரழிவு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியல் பொறியியல் பணிப்பாளா் கே என் பண்டார சுட்டிக்காட்டியுள்ளாா்.



