தீவிரமடையும் போர்களம்! ரஷ்யாவின் பதிலடியால் திணறும் மற்றொரு நாடு
பிரித்தானியாவை தொடர்ந்து ஜெர்மனியின் பொருளாதாரமும் தற்போது மோசமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் -0.3 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனி பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெர்மனி நாட்டின் பொருளாதார சரிவுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வருவது தடைபெற்றதால் மட்டுமே என கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பதிலடி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக G7 நாடுகளின் கூட்டாக ஜெர்மனியும் ரஷ்யா மீது அதிகப்படியான தடைகளை விதித்தது.
இதனால் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய், எரிவாயு முதல் அனைத்தும் தடைபெற்றது.
ஜெர்மனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மொத்தமாக தடை செய்யப்பட்டது.
இதனால் ஜெர்மனி நாட்டின் அனைத்து விதமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது, பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக தான் ஏப்ரல் மாதம் ஜெர்மனி நாட்டின் பணவீக்கம் அதிகப்படியாக 7.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பொருளாதார புள்ளிவிபரம்

ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி அரசின், புள்ளியியல் அலுவலகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் படி,ஜெர்மனியின் பொருளாதாரம் எதிர்மறையான வளர்ச்சி அளவில் ஜிடிபி அளவீட்டை பதிவு செய்துள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஜிடிபி டிசம்பர் காலாண்டிலும், மார்ச் காலாண்டிலும் எதிர்மறையான அளவில் உள்ளது.
தொடர்ந்து 2 காலாண்டாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையான நிலையில் சென்றால் மட்டுமே பொருளாதார மந்தநிலை என அறிவிக்கப்படும்.
ஜெர்மனி நாட்டில் ஒரு குடும்பம் வாங்கும் பொருட்களின் அளவும் டிசம்பர் காலாண்டுக்கும், மார்ச் காலாண்டுக்கும் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this video
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri