வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சியின் பின்னணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆளுநர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் இறக்குமதிக்கான அந்நிய செலாவணித் தேவை அதிகரித்துள்ளதால், ரூபாயின் மதிப்பு மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் வீழ்ச்சி
2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் 4.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்திய ரூபாய் 6.4 சதவீதத்தாலும், நேபாள ரூபாய் 6.2 சதவீதத்தாலும், இந்தோனேசிய நாணயம் 5.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி நிலைமை இலங்கைக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் இறக்குமதியில் பெருமளவில் தங்கியுள்ள பல நாடுகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டில் நிலவிய குறிப்பிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளே காரணமாகும்.
தற்போதைய சூழ்நிலை அதிலிருந்து வேறுபட்டு சர்வதேச சந்தையின் தாக்கங்களுடன் தொடர்புடையதாக மாறியுள்ளது.
நாணய மாற்று விகிதத்தின் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தீர்மானிப்பது தவறு என மத்திய ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam