இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டுள்ள அரசாங்கம்
உலகச் சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள் இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் எரிபொருள் நுகர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதிலும், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரியில் எரிபொருள் இறக்குமதிக்காக 186 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது.
எரிபொருள் விலை
கடந்த மே மாதத்தில் அது 521 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுத்த காரணிகள் குறித்து கருத்து தெரிவித்த போது அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri