யோஷிதவின் கைது நடவடிக்கையின் பின்னணி - மகிந்தவின் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம்
இலங்கையில் கடந்த 17ஆம் திகதி முக்கிய தலைப்புச் செய்தியாக காணப்பட்ட யோஷித ராஜபக்சவின் கைது நடவடிக்கையின் பின்னணி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
யோஷித ராஜபக்ச க.பொ.த உயர்தரத்தில் அறிவியல் பாடங்களைக் கற்காமலேயே கடற்படையில் இணைந்திருந்தார்.
யோஷிதவிற்கு தேவையான கல்வித் தகைமைகள் இல்லாததால், அமைச்சரவை தீர்மானம் ஒன்றின் மூலம் கல்வித் தகைமைகளில் திருத்தங்களை மேற்கொண்டு அவர் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு நிலவியது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியான 2016ஆம் ஆண்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் யோஷிதவின் கடற்படை நுழைவு சட்டவிரோதமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு யோஷித ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு யோஷிதவைக் கைது செய்தது.
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO