கடையடைப்பு போராட்டத்தின் பின்னணி: சுமந்திரனின் உள்நோக்கம்
வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பின் பின்னணியில் சுமந்திரனை வடக்கு மாகாண முதலமைச்சராகவும் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் கொண்டுவரும் நோக்கம் இருப்பதாக அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் சிவதர்சன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(18) இரவு இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நேற்று அறிவிக்கப்பட்ட கடையடைப்பு இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் அரசியல் சுய இலாபத்திற்காகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று
ஒரு போதைப்பொருள் வியாபாரி இராணுவத்தினரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நீதித்துறை இருக்கின்றது.
முந்தையங்கட்டில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டார் என்ற காரணத்திற்காக வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தை வெளியேறுங்கள் என்று சுமந்திரன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam
